Oh my lovely.... அழகிய காதலி ....
Posted On Saturday, July 11, 2009 at at 5:25 AM by SundarSஅவளை கண்டதும்
எனக்குள் எதோ மாற்றம்
அவளை தினம் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும் காணத்துடிக்கிறேன் ...
பலமுறை என்னுடன் பழகியவள் அவள்
ஆனாலும் ஒவ்வொரு முறையும்
எங்கோ பிழை செய்கிறேன் ...
உன் பெயரே அழகிய கவிதை...
உன்னை பற்றி எதற்கு
இன்னொரு கவிதை
என் அழகிய ..."தமிழ்"... !!!!!!
END BEGINS....
Posted On Monday, July 6, 2009 at at 9:15 AM by SundarSபிறரின் சாவே
அவனின் வாழ்வு
பிணங்களை கண்டு
மகிழ அவன் மிருகம் அல்ல
ஆனால்
அவன் வீட்டில் அடுப்பெரிக்க
பிணம் எரிக்கும்
வெட்டியான் !!!!
...முடிவில் அவனின் தொடக்கம் ...